மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்களின் தொழிற்சங்க தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும் சில்லறை விற்பனை செய்வதற்கும் எண்ணெய் நிறுவனங்களை அழைப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து அமைச்சர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.
அதேநேரம், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பெற்றோல் சரக்குத் திட்டம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விநியோகத்தை நம்பி 1100க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கையிருப்பு பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.