இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஊடாக தனியார் பஸ்களுக்கு எரிபொருளை முன்னுரிமை வழங்கினால் நாளை மறுதினம் 50 வீதம் பஸ்களை இயக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பங்களுக்கு வழங்கும் எரிபொருள் போதுமானதாக இல்லை என அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவையை பலப்படுத்த வேண்டும்.
மேலும், நாளை எரிபொருள் விடுவிக்கப்பட்டால், தனியார் பஸ்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக எங்களிடம் கொடுங்கள் என்றார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக கடந்த நாட்களில் அதிகபட்சமாக 15வீத பேருந்துகளை இயக்க முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.