காலி-மாகால்லவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு இரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் இடம்பெற்றிருந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.