எரிபொருள் கொள்வனவு, விநியோகம், போன்றவற்றில் எந்தெந்த பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை விளக்கி எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எதிர்வரும் 14ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விஜித் மலல்கொட, மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.