எரிபொருள் விலையை குறைந்தபட்சம் 100 ரூபாவினால் குறைக்க முடியும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Date:

எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தும் உண்மையான விலைகளின்படி ஒரு லீற்றர் எரிபொருளின் உள்நாட்டு விலையை குறைந்தபட்சம் 100 ரூபாவினால் குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் ஒழுங்கு முறையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய உலக சந்தை விலையின்படி இலங்கையில் எரிபொருள் விலையை நேற்று முன்தினம் (17) 20 ரூபாவால் குறைத்தமை போதாது, நியாயமான செலவின் அடிப்படையில் எவரும் அறியக்கூடிய எளிமையான முறையில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்பட வேண்டும். தலைவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முறையான எரிபொருள் விலை சூத்திரம் இல்லாத காரணத்தினால் இலங்கை மின்சார சபை மின்சார உற்பத்திக்கு தேவையற்ற செலவுகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால், வெளிப்படையான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலக சந்தையின் உண்மையான விலைக்கு ஏற்ப இலங்கையில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை மேலும் குறைய வேண்டும் என்றும், உண்மையான எரிபொருள் விலைகள் தொடர்பில் முன்னர் முன்வைக்கப்பட்ட தரவுகள் சரியானவை என நிதி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...