ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி தெரிவு :சபாநாயகர்

Date:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இராஜினாமாவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்தார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது,

​​ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தனது இராஜினாமாவை சமர்ப்பித்துள்ளதாகவும், எனவே அரசியலமைப்பின் பிரகாரம், பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்படுவார் எனவும் தெரிவித்தார்.

மேலும், 1981 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் இலக்கம் 02 மற்றும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 40 வது சரத்தின் படி, சுமூகமான அதிகார மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் இயற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டமியற்றுபவர்கள் தமது ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்த அனுமதிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏழு நாட்களுக்குள் நடைமுறையை முடிக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய ஜனாதிபதியை நியமிக்கும் பணிகளுக்காக நாளை பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர்  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை அமுல்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் சுதந்திரமாக மனசாட்சிக்கு அமைய செயற்படும் வகையில் அமைதியான சூழலை ஏற்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் செயற்பாடுகள் அனைத்து பொறுப்பு வாய்ந்த கட்சிகளின் பங்களிப்புடன் ஏழு நாட்களுக்குள் குறுகிய காலத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...

நீர்கொழும்பு, கட்டான பகுதிகளில் நீர்வெட்டு

நீர்கொழும்பு மற்றும் கட்டான ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் (12) முற்பகல்...

‘தூதர்களை வெளியேற்றினால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்’: ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஈரான் நிபந்தனை.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானிய புரட்சிகர...