பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 26 வயதான போராட்டக்காரர் மூச்சு திணறல் காரணமாக இன்று உயிரிழந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று போராட்டத்தின் போது காயமடைந்த 30 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.