தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இன்று காலி முகத்திடலில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது அந்த இடத்தை விட்டு வசந்த சமரசிங்க வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.