கோட்டாபயவின் விசா காலம் நீடிப்பு: சிங்கப்பூரில் தொடர்ந்தும் தங்கியிருக்க தீர்மானம்!

Date:

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருக்கவுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக சிங்கப்பூருக்கு சென்ற போது வழங்கப்பட்ட அவரது குறுகிய கால பயண அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி எப்போது நாடு திரும்புவார் என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் ராஜபக்ச தலைமறைவாகவும் இல்லை, நாடு கடத்தப்படவும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜூலை 14 அன்று, மாலைத்தீவில் இருந்து சவூதி விமானத்தில் சாங்கி விமான நிலையத்திற்கு வந்தபோது கோட்டாபயவுக்கு 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது.

பணவீக்கம் அதிகரித்து உணவு மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படைத் தேவைகளின் விலைகளை பாதித்ததால், ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் இலங்கையை விட்டு வெளியேறினார்.

அவர் சிங்கப்பூர் வந்த சிறிது நேரத்திலேயே, கோட்டா தனது இராஜினாமாவை சமர்ப்பித்தார், இது ஜூலை 15 அன்று இலங்கை நாடாளுமன்றத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவ அறிக்கையினை சமர்ப்பித்து மேலும் இரு வாரங்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க அனுமதி பெற்றுள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...