ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா ஆதரவளித்ததாக வெளியான செய்திகள் பொய்யானவை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என இந்தியா தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக உயர்ஸ்தானிகராலயம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேறியது தொடர்பாக, இந்தியா அதற்கு ஆதரவளித்ததாக வெளியான செய்திகள் தவறானவை.
ஜனநாயக அமைப்புகள் மற்றும் விழுமியங்கள், ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் இலங்கை மக்கள் செழிப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நனவாக்க முயலும் போது இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று அது மேலும் கூறுகிறது.
High Commission categorically denies baseless and speculative media reports that India facilitated the recent reported travel of @gotabayar @Realbrajapaksa out of Sri Lanka. It is reiterated that India will continue to support the people of Sri Lanka (1/2)
— India in Sri Lanka (@IndiainSL) July 13, 2022