காலி முகத்திடல் போராட்டக்காரர்களை கலைக்க பலாத்காரம் பிரயோகிக்கப்படுவது குறித்து சர்வதேச நாடுகள் மிகவும் கவலையடைவதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் குறித்த போராட்டக்களம் தாக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தை நடத்துவதற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லாத காரணத்தினால், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து ஜனாதிபதி செயலகம் திரும்பப் பெறப்பட்டது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நலின் தல்துவா தெரிவித்தார்.
‘இராணுவம், பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்புப் படைகள் அடங்கிய கூட்டு நடவடிக்கை அதிகாலையில் தொடங்கப்பட்டது,’ என்று அவர் கூறினார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் தூதர்கள் அனைவரும் கவலை தெரிவித்தனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் டுவிட்டரில், அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்படுவதையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவிகளை அணுகுவதையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
காலிமுகத்திடல் போராட்ட தளத்தில் இருந்து வரும் கதைகள் உண்மையில் கவலையளிக்கின்றன.
அமைதியான போராட்டத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு ஐநா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதன்போது, போராட்டக்காரர்களை கலைக்க பலத்தை பயன்படுத்தியதில் மிகுந்த கவலை.
ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்க உரிமை உண்டு, அவற்றின் செயல்பாடுகள் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.