சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில் கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழத்தினுடைய (King Abdul Azeez University) பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு இலங்கையின் விஷேட விருந்தினராக முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
குறித்த நிகழ்வில் சவூதி அரேபியாவின் இளவரசர்கள், அரச குடும்பத்து உறுப்பினர்கள், புனித கஃபாவினுடைய இமாம்கள், ஜித்தா நகரினுடைய மேயர் மற்றும் சவூதி நாட்டிலுள்ள ஆளுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை இலங்கையிலிருந்து அதிதியாக அழைக்கப்பட்ட ஒரே நபர் முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.