புத்தளம் ஸாலிஹீன் பள்ளி நிர்வாகத்தின் மூலமாக சிறுவர்களுக்கான இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை வலுப்படுத்தும் முகமாக மாபெரும் கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர், சிறுமியர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு புத்தளம் ஸாலிஹீன் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அன்புடன் வேண்டிக்கொல்கின்றனர்.
ஒழுங்குகளும் விதிமுறைகளும்.
🔴இப்போட்டி நிகழ்ச்சியில் அனைத்து மஹல்லா வாசிகளும் கலந்து கொள்ளலாம்.
🔴ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் மாத்திரம் கலந்து கொள்ளலாம்.
🔴பங்குபற்றுவோர் அனைவருக்கும் ஆறுதல் பரிசாக சான்றிதழ் வழங்கப்படும்.
🔴முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை வகிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
🔴அதான் நிகழ்ச்சிகளில் சிறப்பாக அதான் கூறுபவருக்கு ஸாலிஹீன் மஸ்ஜிதில் அதான் கூற சந்தர்ப்பம் வழங்கப்படும்.
🔴போட்டி நிகழ்ச்சிகள் யாவும் ஜூலை 13,14 ஆகிய இரு தினங்களில் ஸாலிஹீன் மஸ்ஜிதில் நடைபெறும்.
🔴போட்டியாளர்களுக்கான போட்டி இலக்கங்கள் ஜூலை 11ஆம் திகதி மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரையில் ஸாலிஹீன் மஸ்ஜிதில் மாத்திரம் வழங்கப்படும்.
குறித்த தினத்தில் மட்டுமே வழங்கப்படும் என்பதை கருத்திற் கொள்ளவும்.
🔴இறுதி முடிவு நடுவர்களால் மாத்திரம் தீர்மானிக்கப்படும்.
🔴பரிசளிப்பு விழா ஸாலிஹீன் மஸ்ஜிதுக்கு முன்னாலுள்ள மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவங்களை ஜூலை 8ஆம் திகதிக்கு முன்னால் ஜிப்னாஸ் மெளலவி அவர்களின் வீட்டில் ஒப்படைக்கவும்.
தொடர்பு இலக்கம்: 0712196573,0755051051
பிரிவுகள்.
4 வயதிற்குக் கீழ் பாலர் பிரிவு.
4 தொடக்கம் 6 வயது வரை முன்பள்ளி பிரிவு.
6 தொடக்கம் 10 வயது வரை ஆரம்பப்பிரிவு.
10 தொடக்கம் 13 வயது வரை கனிஷ்ட பிரிவு.
13 தொடக்கம் 16 வயது வரை சிரேஷ்ட பிரிவு.
16 வயதிற்கு மேல் திறந்த பிரிவு.
பாலர் பிரிவு.
ஹதீஸ் (ஒன்று)
துவா (ஒன்று)
கிராஅத் (ஏதாவது)
முன்பள்ளி பிரிவு.
ஹதீஸ் (இரண்டு)
துஆ (இரண்டு)
கிராஅத் (குல் சூராக்கள் ஏதாவது ஒன்று)
நபிமார்களின் வரலாறு.
ஆரம்ப பிரிவு.
ஹதீஸ் (மூன்று)
துஆ (மூன்று)
கிராஅத் (சூரா ஃபீல் அல்லது சூரா குறைஷ்)
நபிமார்களின் வரலாறு.
அதான் ஒலித்தல்.
கஸீதா.
கனிஷ்ட பிரிவு.
ஹதீஸ் (நான்கு)
கிராத் (சூரா அத்தீன் அல்லது சூரத்துல் கதிர்)
துஆ (நான்கு)
பேச்சு: (பெற்றோர்களின் கண்ணியம் அல்லது கல்வியின் முக்கியத்துவம்) 5 நிமிடம்.
கஸீதா.
அதான் ஒலித்தல்.
சிரேஷ்ட பிரிவு.
ஹதீஸ் (ஐந்து)
துஆ (ஐந்து)
கிராஅத் (சூரத்துல் ளுஹா அல்லது சூரத்துஷ் ஷரஹ்)
பேச்சு: (போதையும் எமது சமூகமும் அல்லது ஹஜ்ஜும் அதன் தியாகங்களும்) 5 நிமிடம்
கஸீதா
அதான் ஒலித்தல்.
திறந்த பிரிவு.
கிராஅத் (சூரத்துஷ் ஷம்ஸ்)
கஸீதா.
அதான் ஒலித்தல்.
பேச்சு: (போதையும் எமது சமூகமும் அல்லது குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்கு) 7 நிமிடம்
போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும் விபரங்களாவன.
ஜூலை 13ம் திகதி காலை 8 மணி தொடக்கம்
கிராஅத்
துஆ
மாலை 4 மணி தொடக்கம்
ஹதீஸ்
ஜூலை 14ஆம் திகதி காலை 8 மணி முதல்
நபிமார்களின் வரலாறு
அதான் ஒலித்தல்
கஸீதா.
மாலை 4 மணி
பேச்சு.