ஜனாதிபதியின் செயலாளராக சமன் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே இன்று (ஜூலை 21) பதவியேற்றார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அவர், நேற்று (ஜூலை 20) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.