ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பாரியளவில் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், இன்று புதன்கிழமை அதிகாலை தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
புதன்கிழமை அதிகாலை 3.07 மணியளவில் மாலைத்தீவில் உள்ள வெலேனா சர்வதேச விமான நிலையத்தில் ராஜபக்ஷ வந்திறங்கினார், அந்த நேரத்தில் மாலத்தீவு தலைநகர் பலத்த பாதுகாப்பில் இருந்ததாக ஆதாரங்கள் ஆங்கில ஊடகமான்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.
ராஜபக்சக்களை மாலைதீவில் தரையிறக்குமாறு ஜனாதிபதி மொஹமட் நஷீத் ஜனாதிபதி இப்ராஹிம் சோலியிடம் கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கையின் அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, தற்போதைய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் முழு ஒப்புதலுக்கு உட்பட்டு, குடிவரவு, சுங்கம் மற்றும் பிற சட்டங்களுக்கு உட்பட்டு இந்த விமானம் வழங்கப்பட்டுள்ளது.
விமானப்படைக்கு சொந்தமான அன்டோனோவ் 32 ரக விமானம் மூலம் ஜனாதிபதியின் குழு மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
#Maldivas Not to provide Refuge or Asylum to GR.
The people of Maldives 🇲🇻 stands with the people of #Srilanka 🇱🇰— Thayyib #Maldives (@thayyib) July 12, 2022