முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள நேரடி காணொளியில், ஹிருணிகா ஜனாதிபதியை வெளியே வருமாறு கேட்டுக்கொண்டு நுழைவாயிலுக்கு முன்னால் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.
அவருடன் 10க்கும் மேற்பட்டோர் தற்போது கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புடன் இருக்கும் ஜனாதிபதி மாளிகையின் பிரதான நுழைவு வாயில் அருகே தானும் தன் குழுவினரும் வந்தடைந்ததாக அவர் கூறினார்.
Former MP Hirunika Premachandra has launched a protest near President's house in Fort pic.twitter.com/RDaMRooRTR
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 6, 2022