ஜமாஅத்தே இஸ்லாமியின் அங்கத்தவர் தேசிய மாநாடு!

Date:

இலங்கை ஐமாஅத்தே இஸ்லாமியின் அங்கத்தவர் தேசிய மாநாடு எதிர்வரும் 2022 ஜூலை 31ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நான்கு வருடங்களுக்கொரு முறை ஜமாஅத்தின் தலைவர் (அமீர்) தெரிவு நடைபெறவிருப்பதால் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த நிகழ்வை நேரடியாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கு தடை ஏற்படும் என்பதால் நாட்டில் ஆங்காங்கேயுள்ள தெரிவு செய்யப்பட்ட 30 நிலையங்களில் 1450 அங்கத்தவரகள் கூடி தலைமையகத்தில் இருந்து நெறிப்படுத்தப்படும் மாநாட்டில் பங்கு பற்றுவார்கள்.

இம்மாநாட்டின் போது தலைவர் (அமீர்) தேர்வுக்கான தேர்தல் நேரடி வாக்களிப்பின் மூலம் நடைபெறும்.

ஜமாஅத்தின் யாப்புக்கமைய நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தலைவர் (அமீர்) தெரிவு செய்யப்படுவார்.

இந்தத் தெரிவு குறிப்பிட்ட வருடத்தின் முஹர்ரம் மாதத்தில் நடைபெற வேண்டும்.

அந்த வகையிலே ஜூலை 31ஆம் திகதி மொத்த அங்கத்தவர்களும் பங்கு பற்றும் இத்தேசிய மாநாடு சூம் தொழில்நுட்பத்தினூடாக நடைபெறுவதாக ஜமாஅத்தே இஸ்லாமியின் உதவிப் பொதுச் செயலாளர் எம்.எச்.எம் ஹஸன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...