ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 ஆம் திகதி பதவி விலகினால், எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி ஜூலை 13ஆம் திகதி பதவி விலகினால் பின்வரும் நிகழ்வுகள் இடம்பெறும்.

பாராளுமன்றம் ஜூலை 15ஆம் திகதி கூடவுள்ளது, குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும், ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதி  தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், புதன்கிழமைக்குள் ஜனாதிபதி இலங்கை திரும்புவார் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அருகில் உள்ள நாட்டில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...