டுபாய்க்கான Fly Dubai விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Date:

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் Fly Dubai நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

டுபாய்க்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் ஜூலை 10ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரத்து செய்யப்பட்ட விமானங்களின் பற்றுச்சீட்டு மற்றும் பணம் என்பன பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...