தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு 40 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்!

Date:

நேற்று (ஜூலை 26) இரவு 9:00 மணிக்குள் 4 மில்லியன் மக்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பெற பதிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 299 பெட்ரோல் நிலையங்களிலும்  ஐ.ஓ.சி 34 பெட்ரோல் நிலையங்களிலும் QR அமைப்பு சோதனை செய்யப்பட்டதாக அவர் தனது ஒரு ட்வீட்டர் தளத்தில் தெரிவித்தார்.

நேற்றிரவு வரை 2,364,434 மோட்டார் சைக்கிள்களும் 723,022 முச்சக்கரவண்டிகளும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...