நாட்டின் நிலைமையை வழமைக்கு கொண்டு வர பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதி என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு சபையின் தலைவர், பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் அடங்கிய குழுவொன்றுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஆயுதப்படை மற்றும் பொலிஸாருக்கு ஆதரவளிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று இன்று பிரதமர் அலுவலகம் மற்றும் கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளின் வீடுகளை முற்றுகையிட சதி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக கோரி கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.