நாளை மற்றும் நாளை மறுதினம் 03 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, பிற்பகல் 01 மணித்தியாலம் 40 நிமிடங்களும் இரவில் 01 மணித்தியாலம் 20 நிமிடங்களும் மின்சாரம் தடைப்படும்.
அந்த 02 நாட்களில் 02 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (ஜூலை 17) 3 மணி நேர மின்வெட்டுக்கு அமுல்படுத்தப்படும்.
அதற்கமைய A-L மற்றும் P-Q வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகள் பிற்பகல் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்கள் துண்டிக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என ஜனக ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
மின் தடை அட்டவணை கீழே உள்ளது.