நீர் கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் எதிர்காலத்தில் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பெரும்பாலான வீட்டு நீர் பாவனையாளர்கள் இவ்வாறான நிலுவைகளை செலுத்தவில்லை என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகையை செலுத்தாத அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தங்கியுள்ள குடியிருப்புகளுக்கான நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத மேலும் தெரிவித்தார்.
இதேவேளை நுகர்வோரிடமிருந்து ரூ. 7.5 பில்லியன் நீர் வழங்கல் சபைக்கு செலுத்தப்படவில்லை என்றும், ஒவ்வொரு ஆண்டும் 50,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டண பில்களை செலுத்தவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.