பண்டைய காந்தாரத்தின் பௌத்த சடங்குகள் ஆரம்பமாவதை முன்னிட்டு தாய்லாந்து பௌத்த துறவி பாகிஸ்தான் பயணம்!

Date:

வரலாற்றில் முதன்முறையாக, கி.பி 1-7 ஆம் நூற்றாண்டு பண்டைய காந்தாரத்தின் பௌத்த சடங்கு 1300 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது.

அதற்கமைய தாய்லாந்தின் புகழ்பெற்ற புத்த துறவி, பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஹரிபூர் மாவட்டத்தில், தக்சீலாவின் அருகமைந்த ஜௌலியன் எனும் உலக பாரம்பரிய தளத்திற்கு  தனது 20 சீடர்களுடன் வருகைத் தந்தார்.

அவர் மூன்று மாத ‘Rain Retreat Program’ திட்டத்திற்காக சென்றுள்ளார். இது பொதுவாக தீவிர கற்றல் காலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் படி துறவிகள் மழைக் காலத்தில் ஒரே இடத்தில் தங்கி, சந்திர நாட்காட்டியால் தீர்மானிக்கப்படும் மூன்று மாத மடாலய பின்வாங்கலைச் செய்வார்கள்.

தக்ஸிலா, ஸ்வாட், தக்த்-இ-பாஹி மற்றும் பெஷாவர் பள்ளத்தாக்கில் தியானம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள்.

அத்தோடு, வழக்கமாக  இந்த திட்டம் கோஷமிடுதல், நன்கொடைகள் மற்றும் துறவிகளின் ஆசீர்வாதங்களை உள்ளடக்கிய ஒரு விழா நிகழ்வுடன் நிறைவுபெறும்.

வரலாற்றில் ஒரு உயர்மட்ட பௌத்த துறவி ஒருவர் ‘Rain Retreat Program’ நிகழ்ச்சிக்காக பௌத்த புனித இடங்களுக்குச் சென்று அமைதிச் செய்தியைப் பரப்புவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...