பல இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகித்த அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் காலமானார்!

Date:

சமகாலத்தின் சிறந்த அறிஞராகக் கருதப்படும் பேராசிரியர் அஸ்ஸெய்யித் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் அவர்கள் ஜோர்த்தானில் காலமானார்.

யெமன் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவருடன் பா அலவி சாதாத் வழி முறையில் அல்மஷ்ஹூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

யெமன் நாட்டின் ஏடன் அல்லது அத்ன் பகுதியை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நீண்டகாலமாக வசித்து வந்தார்கள்
செய்ஹ் ஹபீப் அபூபக்ர் அல் மஷ்ஹூர் சமகால இஸ்லாமிய (பிக்ஹ்) கலைத்துறையில் அறிமுகம் செய்த முக்கிய திருப்பமாக ‘பிக்ஹ் அல் தஹாவுலாத்’ காணப்படுகிறது.

‘மறுமைநாள் பற்றிய சட்டங்கள்’ என்ற அம்சம் பிரதானமாகும் நவீன காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு (பித்னாக்களுக்கு) இஸ்லாமிய வரையறைக்குள் எவ்வாறு தீர்வு காண்பது என்ற விடயத்தை பல தசாப்தங்களாக ஆய்வு செய்து நூற்றுக்கணக்கான நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.

பா அலவி சூபி மரபில் தவிர்க்க முடியாத ஒர் ஆளுமையாக அபூபக்ர் அல் மஷ்ஹூர் அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

இந்தோனேசியா மலேசியா யெமன் ஜோர்தான் உட்பட பல இடங்களில் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவியதோடு பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனங்களையும் அவர்கள் நிர்வகித்து வந்தார்கள்.

தனது சொந்த முயற்சியால் யெமனில் தனியான பல்கலைக்கழகம்  ஒன்றையும் செய்ஹ் அபூபக்ர் அல் மஷ்ஹூர் நிறுவியுள்ளார்கள்.

பேருவளை ஜாமிஆ நளீமியா சீனன் கோட்டை ஜாமிஆ அல் பாஸிய்யா காலி தலாப்பிட்டி மத்ரஸா அல் முஸ்தபவிய்யா உட்பட பல நிறுவனங்களுக்கு அவர்கள் பல தடவைகள் விஜயம் செய்து அங்கு விரிவுரைகளையும் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் தொலைபேசி உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு...

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார...

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...