பாதுகாப்பை வலுப்படுத்த ஜனாதிபதி ரணில் மீது நம்பிக்கை உள்ளது: ரஷ்ய ஜனாதிபதி கடிதம்

Date:

‘பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கையின் அரச தலைவர் என்ற வகையில் உங்களது செயற்பாடுகளில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்’ என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி வத்தேரி இன்று (25) காலை பிரதமர் செயலகத்திற்கு வருகை தந்து ரஷ்ய ஜனாதிபதியின் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை உள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் அனைவரும் வெற்றி மற்றும் அமைதி மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...