அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இராணுவ சிப்பாயிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கி மீட்பு!

Date:

பாராளுமன்றத்திற்கு அருகில் கடந்த ஜுலை 13ஆம் திகதி அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து திருடப்பட்ட துப்பாக்கி கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை, பொல்துவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ சிப்பாயை தாக்கி T-56 துப்பாக்கி மற்றும் சில தோட்டாக்களையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (23) தியவன்னாவ பாலத்திற்கு அடியில் இருந்து கடற்படையின் சுழியோடிகள் துப்பாக்கி மற்றும் வெற்று மெகசின்களையும் மீட்டுள்ளனர்.

இதையடுத்து துப்பாக்கி மற்றும் வெற்று மகசீன் ஆகியவை வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...