பாலியல் நோக்கத்துடனான வன்முறைகள் அவுஸ்திரேலியாவில் அதிகரிப்பு!

Date:

அவுஸ்திரேலியாவில் பாலியல் நோக்கத்துடனான தாக்குதல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளன என அவுஸ்திரேலிய புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

2021 இல் 31,000 பேர் பாலியல் நோக்கதுடனான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் என பதிவாகியுள்ளது என புள்ளிவிபர பணியகம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடகாலப்பகுதியில் இத்தகைய குற்றங்கள் 13 வீதம் அதிகரித்துள்ளன, இத்தகைய குற்றங்கள் மாத்திரம் கடந்த வருடம் அதிகரித்துள்ளன.

பாலியல் நோக்கத்துடனான வன்முறைகளை எதிர்கொண்டவர்களில் 87 வீதமானவர்கள் அது குறித்து முறைப்பாடு செய்யவில்லை இதன் காரணமாக உண்மையான எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆண்கள் தங்கள் வாழ்க்கை துணையை தாக்குவது அதிகமாக காணப்படுகின்றது என பாலியல் வன்முறை தொடர்பான முன்னிலை பணியாளரான டாரா ஹன்டர் தெரிவித்துள்ளார்.

37 வீதமான சம்பவங்கள் வீடுகளில் இடம்பெற்றுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தனிப்பட்ட உறவுகளின் சூழமைவின் அடிப்படையில் இவை இடம்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...