புதிய பிறழ்வுடன் நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று தலைதூக்கும் அபாயம்: 4 ஆவது தடுப்பூசியை பெறுவோம்!

Date:

புதிய பிறழ்வுடன் நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து மீள்வதற்கு கொவிட் தடுப்பூசிகள் நான்கு டோஸ்களையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கொவிட தொற்று முடியவில்லை – 4 ஆவது தடுப்பூசியை பெறுவோம்” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

உண்மையில் கொவிட் தொற்று முழுவதுமாக கட்டுப்பாட்டுக்கு வரவில்லை. முதன்மை தடுப்பூசியை பெற்றவர்கள் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியையும் பெறுமாறு முன்னர் நாம் கூறியிருந்தோம். இவ்வாறு பூஸ்டர் தடுப்பூசியை பெற்றவர்களைதான் நாம் நான்காவது தடுப்பூசியையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். தற்போது இலங்கையினுள் 20 வயதுக்கும் அதிகமானோருக்கு வெற்றிகரமாக முதன்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நூற்றுக்கு 97 சதவீதமானவர்களுக்கு. எனினும் பூஸ்டர் தடுப்பூசி நூற்றுக்கு 7.9 சதவீதமானவர்களுக்கு மாத்திரமே போடப்படடுள்ளது.

தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் செலுத்திக்கொள்ள முடியும்.

கொரோனா 4ஆம் தடுப்பூசியினை செலுத்திக்கொள்வதன் ஊடாக வைரஸ் தொற்றின் பாதிப்பினை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், மரணம் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபட முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்

அரசாங்கப் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக இன்று (ஜனவரி 21)...

நபிகளாரின் விண்ணுலக பயணம் மி ஃராஜ் நினைவு தின நிகழ்ச்சி.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 17 சனிக்கிழமை இரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை வெள்ளிக்கிழமையிலிருந்து (23) மாற்றமடையும் என...