கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கெர்னரை ஆகஸ்ட் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு நடைபெறும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜூலை 13 ஆம் திகதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொல்துவ சந்தியில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கெர்னர் நேற்று ஜூலை 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.