போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்!

Date:

உலக வர்த்தக மையத்திற்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் கூட்டமைப்பிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

நாளைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து களனி பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியிருந்தனர்.

இவர்கள் கொழும்பு கோட்டை பகுதியில் உலக வர்த்தக மைய கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள வீதித் தடையை உடைத்துக்கொண்டு முன்னால் செல்ல முயன்ற போது அவர்கள் மீது நீர்த்தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதால் பதற்றநிலைமை உருவாகியுள்ளது.

Popular

More like this
Related

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...