போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்தி அவர்களை விடுவிக்குமாறு கோரி மதகுருமார்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு கோரிக்கை விடுத்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இன்று (29) காலி முகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டப் பகுதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, சிவில் சமூகத்தின் நியாயமான போராட்டத்துடன் நாங்கள் இருக்கிறோம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க மற்றும் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் ஷனுக்க கருணாரத்ன ஆகியோரும் காலி முகத்திடல் போராட்ட மைதானத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மதகுருமார்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினர்