போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர கைது!

Date:

கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது  பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்தார்.

இதன்போது அவருடன் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பத்து பேரில் ரெஹான் ஜெயவிக்ரமவும் ஒருவர்.

ஹிருணிகா தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை காலை ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘கோட்டாபய ராஜபக்ச அவர்களை சந்திக்க வேண்டும்’ என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

Popular

More like this
Related

கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும்: ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள்...

பெப்ரவரி 04 முதல் 11 வரை புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு...

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியல் வெளியீடு

இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத்...

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...