‘போராட்டத்தை கலைக்க அதிகாரம் இருந்தும் கோட்டாபய அவ்வாறு செய்யவில்லை’:ஓமல்பே சோபித தேரர்

Date:

காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல் வெறுக்கத்தக்கது மற்றும் கொடூரமானது என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு போராட்டத்தை கட்டுப்படுத்தும் திறன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இருந்ததாகவும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 24 மணித்தியாலங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இதுவரை சரியான சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மக்கள் போராட்டங்களை ஆயுத பலத்தால் ஒடுக்குவதற்கு இடமளிக்க வேண்டாம் என அண்மையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.

அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையில், ஆயுதம் ஏந்தாமல் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டக்காரர்கள் மீது நள்ளிரவில் ஆயுதப் படைகள் பயங்கரவாதக் குழுவின் பாணியில் தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடானது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கும் இவ்வாறே மக்கள் போராட்டத்தை அடக்கும் திறமை இருந்தது.

ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்சவை விட கடுமையான தீர்மானம் எடுப்பவர் என்பதை நாடு புரிந்துகொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...