நாட்டில் மற்றொரு கொவிட்-19 அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் இலங்கையின் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேநேரம், சமீபத்திய கொவிட் வைரஸின் மாறுபாடு காரணமாக தொற்றுநோய் மீண்டும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதன்மூலம், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, கொவிட்-19 தடுப்பூசியின் 4ஆவது டோஸைப் பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2ஆவது பூஸ்டர் ஷாட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய மாறுபாடு மிகவும் பரவக்கூடியது என்று கூறிய டாக்டர் குணவர்தன, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் 4வது டோஸைப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
மேலும், தடுப்பூசி போடுவதன் மூலம் வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான நோய்கள் மற்றும் இறப்புகளைத் தடுக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
தடுப்பூசிகளை அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளிலும், சுகாதார திணைக்களத்தின் வைத்திய அதிகாரி மற்றும் ஏனைய ஒதுக்கப்பட்ட தடுப்பூசி நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என வைத்தியர் அசேல குணவர்தன் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக தடுப்பூசி மையங்களை அணுகி முன்பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.