தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலியின் 1974 ஆம் ஆண்டு ‘ரம்பிள் இன் தி ஜங்கிள்’ ஹெவிவெயிட் டைட்டில் ஃபைட்டின் சாம்பியன்ஷிப் பெல்ட் $6.18 டொலர் மில்லியனுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
டல்லாஸில் உள்ள ஹெரிடேஜ் ஏலத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெல்ட்டிற்கான பரபரப்பான போட்டியில் இண்டியானாபோலிஸ் கோல்ட்ஸ் உரிமையாளர் ஜிம் இர்சே வெற்றி பெற்றார்.
இதனையடுத்து அவர், தனது டுவிட்டர் பக்கத்தில், தற்போது நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் ரொக் இசை, அமெரிக்க வரலாறு மற்றும் பொப் கலாச்சார நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றின் தொகுப்பிற்காக அவர் பெல்ட்டைப் பெற்றதாக இர்சே உறுதிப்படுத்தினார்.
மேலும், குறித்த பெல்ட் ஆகஸ்ட் 2 ஆம் திகதி சிகாகோவின் நேவி பியர் மற்றும் செப்டம்பர் 9 ஆம் திகதி இண்டியானாபோலிஸில் காட்சிக்கு வைக்கப்படும், எனவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
1974 ஆம் ஆண்டு இடம்பெற்ற குத்துச்சண்டையின் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாகும்.
ஆப்பிரிக்க நாடான ஜயரில் ஹெவிவெயிட் பட்டத்தை மீண்டும் கைப்பற்ற ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தி அலி சாதனை படைத்தார்.
எட்டாவது சுற்றில் நாக் அவுட்டில் நடந்த சண்டையில் முஹமது அலி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
BREAKING—-Muhammad Ali’s
championship belt from 1974 ‘Rumble in the Jungle’ when he employed his rope-a-dope and defeated George Foreman—-just added to @IrsayCollection Just in time for the Aug. 2 show at Chicago’s Navy Pier (and Sept. 9 at Indy). Proud to be the steward!🙏 pic.twitter.com/REJOGV1Cwq— Jim Irsay (@JimIrsay) July 24, 2022