சவூதி அரசினால் ஹஜ் யாத்திரிகர்களுக்கான விசேட செயலி (APP) சிங்கள மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது.
சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு சிறந்த முறையில் தமது ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற அனைத்து வழிகளிலும் பங்களிப்பை வழங்கவுள்ளது.
அதனடிப்படையில் பல உலக மொழிகளில் யாத்திரிகர்களுக்கு பலவிதமான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும், விழிப்புணர்வுகளையும் வழங்கும் வகையில் இந்த செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதில் சிங்கள மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.