ஹட்டன் பகுதியில் அம்பிபுலன்ஸ் முச்சக்கர வண்டிகளின் மீது மோதி விபத்து: மூவர் காயம்!

Date:

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் அளுத்கம பகுதியில் நேற்று பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று மூன்று முச்சக்கர வண்டிகளின் மீது மோதிவிட்டு, வீட்டின் நுழைவாயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், அவரை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 60 வயதுடைய பெண் ஒருவரும், ஆண் ஒருவரும், 17 வயதுடைய இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

மேலும் மதுபோதையில் இருந்த ஆம்புலன்ஸ் சாரதியை கைது செய்த ஹட்டன் பொலிஸார், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...