எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பெற்றோலுடன் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் நிலவும் பெற்றோல் தட்டுப்பாடு ஓரளவுக்கு நீங்கும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் ஏற்றிச் செல்லும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 13ஆம் திகதிக்கும் 15ஆம் திகதிக்கும் இடையில் இலங்கைக்கு வரவுள்ளதாக ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
மேலும் 02 கப்பல்கள் ஜூலை 29 முதல் 31 வரையிலும் ஆகஸ்ட் 10 முதல் 15 வரையிலும் இலங்கைக்கு வரும் என்றும் ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.