12 காரணிகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டன!

Date:

12 காரணிகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நான்கு சந்தர்ப்பங்களில் எரிபொருள் விலைகள் அதிகரித்ததன் காரணமாக தேசிய பேருந்துக் கட்டணக் கொள்கைக்குப் புறம்பாக பேருந்துக் கட்டணங்கள் திருத்தப்பட்டதாக NTC அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் உதிரிப் பாகங்களின் விலை 10.24% அதிகரிப்பு என்பன உட்பட கடந்த ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் 35% அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான மிலன் மிராண்டா தெரிவித்தார்.
ஏப்ரல் மாதத்தில் மேலதிகமாக 10.24% குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் பஸ் கட்டணத் திருத்தம் செய்யப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அனைத்து பஸ்களிலும் புதிய பஸ் கட்டணத்தை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பான முறைகேடுகளை நடமாடும் ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும் வழிகாட்டல்களை மீறும் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...