இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் முதல் பதக்கமாக வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
55 எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்திய இசுரு குமார இந்த பதக்கத்தை வென்றுள்ளார்.
இதில் மலேசியா தங்கப் பதக்கமும், இந்தியா வெள்ளிப் பதக்கமும் வென்றன.
இதேவேளை, 49 கிலோகிராம் பெண்களுக்கான எடைப் பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீமாலி சமரகோன், இன்று 8வது இடத்தை பிடித்தார்.
ஸ்ரீமாலி ஸ்னாட்ச் சுற்றில் 65 கிலோ எடையுடன் மொத்தம் 152 கிலோ எடையை அதிகபட்சமாக வெளிப்படுத்தினார்.
இலங்கை பூப்பந்து அணி நேற்றைய பூப்பந்து கலப்பு குழு போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து, ஜூலை 30 அன்று இந்திய அணியிடம் ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
ஆண்களுக்கான ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் மூன்றாவது போட்டியில் விளையாடிய இலங்கை ரக்பி அணி, இன்று சமோவாவிடம் 44-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது, அதே நேரத்தில் பெண்கள் அணியை 74-0 என்ற கணக்கில் கனடா தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.