22ஆம் திகதிக்கு முன் இலங்கைக்கு பெற்றோல் கப்பல் வருவதற்கு தேவையான ஏற்பாடுகள்!

Date:

எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றோல் கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பெற்றோல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பலை எதிர்வரும் 13ஆம் திகதிக்குள் இலங்கைக்கு கொண்டு வர சப்ளையர் ஒருவர் முன்வந்துள்ளதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அதிக விலையில் பெற்றாலும், பெற்றோல் பங்குகளை ஏற்றிச் செல்லும் கப்பலை கொண்டு வருவதற்கு தேவையான முன்பணம் இன்றே செலுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பெட்ரோலை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள நாணயக் கடிதம் விநியோகிக்கப்பட்டபோதும், வங்கி தரமிறக்கல் காரணமாக இந்த கப்பல் இலங்கைக்கு வர மறுத்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மலேசியாவின் நிறுவனம் ஒன்று எதிர்வரும் 13 ஆம் திகதியன்று பெட்ரோலை இலங்கைக்கு எடுத்து வர இணங்கியுள்ளது.

அதற்கமைய மலேசியா நிறுவனத்திடம் அதிக விலைக்கு பெட்ரோலை 13ஆம் திகதியன்று கொள்வனவு செய்வதா? அல்லது 22 ஆம் திகதி ஐ.ஓ.சி நிறுவனத்தின் கப்பல் வரும் வரை பெட்ரோல் இல்லாமல் இருப்பதா? என்பதை தீர்மானிக்கவேண்டும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...