3 வருடங்களின் பின்னர் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் ஹஜ் குழு ஜித்தா பயணம்!

Date:

சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையிலான இலங்கை ஹஜ் தூதுக் குழுவை இலங்கை தூதுவர் பாக்கீர் அம்சா மற்றும் அவரது குழுவினர் ஜூலை 3 ஞாயிற்றுக்கிழமை ஜித்தா விமான நிலையத்தில் வரவேற்றனர்.

சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையிலான ஹஜ் குழுவினர் இன்று புனித ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக ஜித்தா புறப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில், நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பழீல், முஸ்லிம் கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் சாஹிப் அன்ஸார் மற்றும் ஹஜ் குழு தலைவர் அஹ்காம் உவைஸ் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்.

மூன்று வருடங்களின் பின்னர், இலங்கை முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியின் போதும், வாய்ப்பு கொடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக மற்றும் அரசாங்கத்துக்கும் அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரண்டு வருடங்களின் பின்னர், உலக முஸ்லிம்கள் பரந்தளவில் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திய சவூதி அரேபிய அரசாங்கத்துக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...