6 சமூக செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாடு செல்ல தடை!

Date:

ஆறு சமூக செயற்பாட்டாளர்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த ஆறு செய்றபாட்டாளர்களும் வெளிநாடு செல்ல முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், அவர்களின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்யுமாறு கோட்டை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜீவந்த பீரிஸ், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ரங்கன லக்மால், லஹிரு வீரசேகர மற்றும் எரங்க குணசேகர ஆகியோரின் பெயர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளடங்குகின்றன.

ஜூன் 9ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த 6 பேருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...