அலரிமாளிகையில் இரு குழுக்களிடையே மோதல்: 10 போராட்டக்காரர்கள் காயம்

Date:

கொழும்பு அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தினால் காயமடைந்த பெண் ஒருவரின் தொண்டையும் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரு குழுக்களுக்கிடையில் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து 10 போராட்டக்காரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து காயமடைந்த இரு போராட்டக்காரர்கள் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 09 ஆம் திகதி நடைபெற்ற பொது மக்கள் எழுச்சியின் போது அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அலரிமாளிகையை ஆக்கிரமித்துள்ளனர்.

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...