‘எனக்கு இருந்த ஒரே வீடு’: ஜூலை 9 நடந்த சம்பவங்கள் குறித்து பிரதமர் விசேட அறிக்கை

Date:

கடந்த ஜுலை மாதம் 9ஆம் திகதி தனது வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அவரது வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

தனது வீடு எரியூட்டப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்துள்ளார்.

போராட்டத்திற்கு புறப்படும் மக்கள் தனது வீட்டை கடந்து செல்வதாக அன்றைய தினம் மாலை பொலிஸார் தமக்கு தெரிவித்ததாகவும் அவர்கள் அங்கு போராட்டம் நடத்தலாம் எனவும் அவர் கூறினார்கள்.

அதன் காரணமாக அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் அந்த கோரிக்கையை பரிசீலித்து தானும் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறியதாக பிரதமர் கூறினார்.

அதன் பின்னரே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் சரிந்ததால் தான் பிரதமர் பதவியை ஏற்றேன் என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...