அதிகார பலத்தை வெளிநாடுகளுக்கு வழங்குவது எதிர்காலத்தில் நாடும் மக்களும் எதிர்கொள்ளும் மிகவும் ஆபத்தான நிலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவை சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் எரிசக்தியை நிர்வகிக்கும் அதிகாரத்தை வெளிநாடுகளிடம் ஒப்படைப்பது நாட்டை இருளில் மூழ்கடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிசக்தி அமைப்பை முன்னோக்கி நகர்த்தும் புதிய மின்சாரக் கொள்கையொன்றை உருவாக்குவதே தமது நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மின்சார சபைகள் தேசிய வளம் எனவும், அவற்றைப் பாதுகாத்து நிர்மாணித்து அதிக இலாபம் ஈட்டுவதற்கு தேவையான வீதித் திட்டமிடல் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.