எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்வரும் காலங்களில் பேக்கரி தொழில் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் 50சதவீதம் பேக்கரிகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன, அதுவும் கொள்ளளவு குறைவாக உள்ளது.
மா, எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.