கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகள் அறிமுகம்!

Date:

கொழும்பு மாநகர சபை இன்று கொழும்பின் சில பகுதிகளில் சைக்கிள் பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் பாவனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனவே, கொழும்பில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியான பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .

இந்த வகையில் டச்சு வைத்தியசாலைக்கு அருகாமையிலும், ஜனாதிபதி மாவத்தைக்கு அருகில் உள்ள இலங்கை வங்கியிலும், கொழும்பு துறைமுகம் வரையிலான ஆர்மர் வீதியிலும் தனியான சைக்கிள் பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் துவிச்சக்கர வண்டியில் பயணிப்பவர்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு விசேட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் ஆனது கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் விரைவில் அறிமுகப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...