கொழும்பில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள விசேட பொலிஸ் படை!

Date:

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தினால் இன்று (08) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளதுடன் நாளை 09ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துவதற்காக உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மேலும், இந்த திகதிகளில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் பேரணியை ஆரம்பித்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை பேரணியாகச் சென்றதன் பின்னர் இந்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொது அமைதியை நிர்வகிக்கவும் விசேட அதிரடிப்படையினருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு கட்டளைத் தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இப்பணிகளை மேற்கொள்வதற்கு அதிகளவான விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொழும்பு பிரதேசத்திலுள்ள முகாம்கள் மற்றும் நிலையங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தியோகத்தர்களை அவசர காலங்களில் மேற்படி கடமைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...